மக்களைப் பாதுகாக்கும் கேடயம்தான் சட்டம்!

– உச்சநீதிமன்றம் கருத்து

மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் எஸ்.ஆர்.பட் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்துவதற்கு சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

அற்பமான வழக்குகள் அதன் புனிதத் தன்மையை சிதைக்காமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதோடு, சட்டம் என்பது வாள் போன்று அப்பாவிகளை அச்சுறுத்துவதை விட, அவர்களை பாதுகாக்கும் கேடயமாக இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

You might also like