தலைக்கனத்தால் வீழ்ந்த வடிவேலுவும் பாலாவும்!

“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்” என்று பாடலால் போதித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

உயரங்கள் தொடும்போது பணிவு மறந்ததால், பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் அரசியலிலும், சினிமாவிலும் நிறைய பேர் உண்டு.

சமீபத்திய உதாரணம் இயக்குநர் பாலாவும், வைகைப்புயல் வடிவேலுவும்.
பணிவு துறந்து, பழசையும் மறந்ததால் இருவரும் வீழ்ந்த கதையை பார்க்கலாம்.

பாலா

பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த பாலா, சேது படம் மூலம் இயக்குநராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

சினிமா என்பது கூட்டு முயற்சி. 

ஆனால் சேதுவின் வெற்றிக்கு தான் ஒருவனே காரணம் என்ற தலைக்கனம் அடுத்த படத்திலேயே ஏறியது பாலாவுக்கு..

அவரது, இரண்டாவது படம் நந்தா!

முதலில், அஜித் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பாலாவுடன் அவரால் ஒட்டமுடியவில்லை.

பின்னர், பாரதிராஜா மகன் மனோஜ் நடிப்பதாக இருந்து, கடைசியில் சூர்யா கொண்டு வரப்பட்டார்.

அந்தப் படம் சுமராக வெற்றிபெற்ற நிலையில் 3-வது படமான பிதாமகனில் விக்ரமும், சூர்யாவும் சேர்ந்து நடித்தார்கள்.

90 நாட்களில் படத்தை முடித்து தருவதாக தயாரிப்பாளரிடம் சொல்லி இருந்த பாலா, 250 நாட்களாக இழுத்தார். விக்ரமுடன் அந்த படத்தில் மோதல் உருவானது.

விக்ரமுக்கு, அந்தப்படம் தேசியவிருது பெற்றுத் தந்தாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் இல்லை.

இளையராஜாவின் ஆயிரமாவது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கும் வாய்ப்பு பாலாவுக்கு கிடைத்தது.

இந்தப் படத்தில் அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான சசிகுமாருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

விக்ரம் மகனை ஹீரோவாக வைத்து ‘வர்மா’ எனும் படத்தை இயக்கினார் பாலா.
படம் பார்த்த விக்ரம் அதிர்ச்சி அடைந்தார். அந்தப்படம் ரிலீஸ் ஆனால் தனது மகனின் சினிமா வாழ்க்கை சூன்யமாகி விடும் என உணர்ந்தார்.

அந்தப்படம், வெள்ளித்திரைக்கு வரவே இல்லை. சும்மா இருந்த பாலாவை, தனது சொந்த தயாரிப்பில் இயக்க வைத்தார் சூர்யா.

அதுதான் ‘வணங்கான்’.

படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவை பலர் முன்னிலையில் ஒருமையில் பேசியும், அதிக டேக்குகள் வாங்க வைத்தும் கேவலப்படுத்தியதால் அந்த படத்தையே ‘டிராப்’ செய்தார், சூர்யா.

இதனால் பல கோடிகள் சூர்யாவுக்கு நஷ்டம். பணிவு மறந்ததால் நல்ல நண்பர்களை இழந்து நிற்கிறார் பாலா.

வடிவேலு

கோடம்பாக்கம் வந்த நேரத்தில் எல்லோரையும் ‘அண்ணே’ என்று அழைப்பது வடிவேலுவின் வழக்கம்.

உயரம் ஏற ஆரம்பித்தபோது, அண்ணே எனும் வார்த்தை மறந்து போய், பெயர் சொல்லி அழைத்தவர், உச்சம் தொட்ட நேரத்தில் வா, போ என ஒருமைக்கு தாவியதால், பலர் இவரை விட்டு விலகி ஓடிவிட்டனர். சிலர் தவிர்த்தனர்.

கேப்டன் விஜயகாந்த் – ஒரு உதாரணம்.

தனது காதலன் படம் மூலம் வடிவேலுவை இந்தியா முழுக்க அறிய வைத்தவர் ஷங்கர்.

தான் தயாரித்த இம்சை அரசன் 23 -ம் புலிகேசி மூலம் வடிவேலுவை நாயகன் ஆக்கியவர் ஷங்கர்.

அதன் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கொடுத்த இம்சையால் அந்த படமே டிராப் ஆனது. ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் இழப்பு.

இதனால் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார்.

அதுவும், நாயகன் ரோலில். ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டதால், படம் டப்பா ஆனது.

தயாரிப்பாளருக்கு நஷ்டம். இயக்குநர் சுராஜுக்கும் கெட்டபெயர்.

வடிவேலு, கதாநாயகனாக நடித்த தெனாலிராமன், இந்திரலோகத்தில் அழகப்பன், எலி ஆகிய படங்களும், இவரது தலையீட்டால் சுருண்டதையும் நினைவில் கொள்வோம்.

– பி.எம்.எம்.

You might also like