– இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ்
மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர்.
சமீபத்தில் அவர் இயக்கிய ‘சாட்டர்டே நைட்’ திரைப்படம் வெளியானது. அப்போது சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். அது சர்ச்சையாக மாறியது. அப்படி என்னதான் அவர் பேசினார்.
“கடந்த 17 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் சொன்னேன்.
படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகிறார்கள். ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு, மோசமான படத்தை நல்லா இருப்பதாக ட்வீட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
யூடியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகிறார்கள்.
அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிடவேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள்.
நல்ல விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறைவு. தனிப்பட்ட விஷயங்களையும் விமர்சனத்தில் இழுக்கிறார்கள். மெஸ்சியின் ஆட்டம் மோசமாக இருந்தால், அதை விமர்சியுங்கள். அவருடைய தனிப்பட்ட விஷயத்தை ஏன் இழுக்கவேண்டும்?” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.