குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!

– சே குவேரா

நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது.

க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க கடிதம்.
*
எனது குழந்தைகளுக்கு,

பிரியமான ஹில்டீட்டா, அலைடீட்டா, கியாமிலோ, சீலியா, எர்னஸ்டோ.
என்றாவது நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க நேர்ந்தால் அதன் அர்த்தம் நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேன் என்பதுதான்.

உங்கள் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவு பெரிய நினைவுகள் எதுவும் இருக்காது. மிகவும் கீழே உள்ளவர்களுக்கு என்னைப் பற்றிய நினைவே இருக்காது.

சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும். தனது தத்துவத்தில் ஒரு போதும் பின்வாங்காமல் வாழவும் செய்த ஒருவராக இருந்தார் உங்கள் தந்தை.

நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும் என்பது தான் இந்தத் தந்தையின் விருப்பம். மனதில் பதிகிற மாதிரி படிக்கவும், இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற தொழில்நுட்ப வித்தையில் நிபுணத்துவம் பெறவும் வேண்டும்.

முழு முக்கியமானது புரட்சிதான் என்றும் தனியாகக் கையில் எடுத்தால் நம் எல்லோருக்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதைவிட முக்கியமானது, அநீதியை எங்கு பார்த்தாலும் எதிர்க்க முடிய வேண்டும். ஒரு புரட்சியாளனின் மிகவும் வணக்கத்திற்குரிய குணம் அது தான்.

குழந்தைகளே, இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்.
என்றாவது ஒரு நாள் நாம் பார்க்க முடியமென்று விரும்பலாம்.

என் பொன் முத்தங்களையும், தழுவல்களையும் இத்துடன் அனுப்புகிறேன்.

என்றும்
உங்கள் தந்தை
சே குவேரா

– புலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சேகுவேராவின் கடிதங்கள்’ நூலிலிருந்து ஒரு கடிதம் : தமிழில் உமர்.
#

You might also like