– மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில்,
“நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை. தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது” என ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.