– சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழத்தில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகம், புதுச்சேரியில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், வங்கக்கடல், அரபிக்கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.