அன்றைய நாடகத்திற்கு இப்படியொரு எதிர்விளைவு!

நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகங்களில் ஒன்று ‘சாவித்ரி’.

அதில் ஒரு காட்சி. கையில் சூலாயுதத்தை ஆவேசத்துடன் நடிகர் ஓங்கி அடிக்கும் காட்சி. ஆங்காரத்துடன் அவர் அடித்த சத்தத்தில் எதிரே நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கரு கலைந்து விட்டிருக்கிறது.

அதன் பிறகு அந்த நாடகம் நடத்தப்படும் போது அந்தச் சூலாயுதக் காட்சிக்கு முன்னால் இப்படி ஒரு அறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

“கர்ப்பிணிகள் யாராவது இருந்தால், தயவு செய்து வெளியே போய் விடுங்கள்’’.

****

 – 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான வார இதழில் இருந்து…

You might also like