பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும்!

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்

பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.

மக்களவையில் விளையாட்டுத்துறை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் நேற்று மீண்டும் தொடங்கியது.

அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு கிராமப்புறங்களில் விளையாட்டுகளை மேம்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

திறமையான இளம் வீரர்,  வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களது திறமையை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், கிராமப்புறங்களில் உள்ள திறமையானவர்களை அரசு அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்குப் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளது எனவும்,  அவர்களை சர்வதேச சாதனையாளராக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதோடு, கிராமப்புறங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக விரைவில் 1000 கேலோ இந்தியா மையங்களை திறக்க உள்ளதாகவும் அனுராக் தாக்குர் அப்போது தெரிவித்தார்.

You might also like