காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, சிவ. மெய்யநாதன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ராமச்சந்திரன், சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு தொடர்பாக மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிநாட்டில் மரம் வளர்ப்பு 21 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம்.

பசுமையான மறுசுழற்சி கொண்ட மீள்தன்மை உள்ள மாநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதோடு,  கடற்கரையில் மரங்களை வளர்க்கும் திட்டம், கடல்பசு மற்றும் தேவாங்கு போன்ற அறியவகை உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகள், பசுமை திட்டங்கள் மூலம் காற்றலை, சோலார் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும்” என்றுக் கூறினார்.

You might also like