அதிகனமழை மற்றும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்திலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.