பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல்: தனுஷ் முதலிடம்!

இந்தியாவில் 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை ஐஎம்டிபி (IMDb) தளம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார்.

உலக அளவில் சினிமா, வெப் சீரிஸ்,  திரை நட்சத்திரங்கள் தொடர்பான தகவல்களையும் தரவுகளையும் வழங்கும் தளம்தான் ஐஎம்டிபி.

வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இந்தத் தளம் வெளியிடும்.

அந்த வகையில், 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய திரை நட்சத்திரங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் முதலிடம் வகித்துள்ளார்.

You might also like