ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் ‘ஃபைண்டர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து, அதற்கு அவர்களுக்கு அரசு தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத் தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்திவைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.
படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் படத்தின் பூஜை கோலாகலமாக நடந்தது. சென்னை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.