சமீபத்தில் உடல்நலக் குறைவால் மறைந்த வெண்ணிலா கபடிக் குழு நடிகர் வைரவனின் மறைவுக்கு சக நடிகரான விஷ்ணு விஷால் சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் வெண்ணிலா கபடி குழு படப்பிடிப்பில் அவருடன் பழகிய நாட்களும் பொழுதுகளும் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கட்டா குஸ்தி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைரவனின் குழந்தைக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். விஷ்ணு விஷாலின் கருணைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.