இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று திடீரென வெடித்துச் சிதறியதில் அப்பகுதி எங்கும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.
பெரும்புகையுடன் எழும்பிய எரிமலை குழம்பை அங்குள்ளோர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளதும் வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
இதனால் இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்புக் குழு, எரிமலை வெடிப்பு நிகழ்ந்த கிட்டத்தட்ட 5 கி.மீ தூரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அங்குள்ள ஆறுகளில் எரிமலை குழம்புகள் மிதந்துவரும் வாய்ப்புகள் உள்ளதால், ஆற்றுப்படுகைகளிலிருந்து 500 மீட்டர் தள்ளியே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அபாயகரமாக எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.