கட்டா குஸ்தி பெண்களுக்கான படம்!

– நடிகர் விஷ்ணு விஷால் 

அண்மையில் திரைக்கு வந்த கட்டா குஸ்தி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் மதுரையில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு செய்தியாளர்களிடம் பேசினார்.

“கட்டா குஸ்தி படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பெண்களுக்காக எடுக்கப்பட்ட படம்.

குள்ளநரிக் கூட்டதிலிருந்து உதயநிதி ஆதரவு அளித்து வருகிறார். கட்டா குஸ்தி படத்தைப் பார்க்காமல் உதயநிதி ஸ்டாலின் வெளியிட ஒப்புதல் தெரிவித்தார்.

மக்களுக்கு நல்ல படத்தை வழங்கிய திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. விமர்சனங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், எல்லா வகையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்

மக்களின் அன்பினால் பதிமூன்று வருடங்களைக் கடந்துள்ளேன். 13 வருட உழைப்பின் பலன் எனக்கு இனிமேல் தான் கிடைக்கும். திரைத்துறையில் ஒவ்வொரு படத்தையுன் மிகக் கவனமாக கையாண்டு வருகிறேன்.

மக்கள் நல்ல படத்தை மட்டுமே திரையரங்குகளில் வந்து பார்க்கிறார்கள். என்னுடைய படத்திற்கு கதை மிக முக்கியமானது. ஏனென்றால் நல்ல கதைகள் மட்டுமே படத்தை வெற்றி பெறச் செய்யும்” என்று தெரிவித்தார்.

You might also like