– சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 7ல் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 8-ல் 13 மாவட்டங்களில் மிகமிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சியில் மிகமிக கனமழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறையில் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 8ல் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, டிசம்பர் 8-ம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலையில் டிசம்பர் 9-ல் மிக மிக கனமழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூரில் டிசம்பர் 9ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இன்று முதல் டிசம்பர் 7 வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். டிசம்பர் 7 முதல் 9 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.