நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர்.
தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையாய் பிறந்த இவரை அவரது தந்தையாரே நாடகத்துக்குத் தத்துக் கொடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி என்கிற நால்வரும் இவரைக் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் அணைத்துக் கொண்டனர். நாடகக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை அவர் அங்கேதான் கற்றார். வீரபத்திரன் என்கிற பழைய நாடக நடிகரிடம் பாடல் கற்றுக் கொண்டார்.
தன் நாடகப் பயிற்சியின் குருநாதர் என்று அவர் குறிப்பிடுவது, நடிகர் எம்.கே. ராதாவின் அப்பாவான எம். கந்தசாமி முதலியாரைத்தான். அவரிடம் பயின்ற மூன்றே மாதங்களில் ‘அபிமன்யூ சுந்தரி’யில் சூரிய பகவானாக வேஷங்கட்டினார்.
நடிப்பதில் மட்டுமன்றி சில கலைகளில் விற்பன்னராகவும் சில கலைகளில் பரிச்சயமுள்ளவராகவும் இருந்துள்ள எஸ்.வி. எஸ்.,
பாரதியைப் போல் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் எஸ்.வி.எஸ்.
- நன்றி முகநூல் பதிவு