விஜே ரம்யாவின் முதல் புத்தகம்: பென்குயின் வெளியீடு!

தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யாவின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. 

இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வழிநடத்த உதவும்.

இன்று புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரக்கூடிய ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். 

இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்கவேண்டும் என்று எண்ணி தன் பயணத்தைத் தொடங்கினார்.

பலவிதமான டயட்,  ஜிம்மில் தீவிரமான வொர்க்கவுட்ஸ் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை ரம்யாவை ஒரு தசாப்தமாக பாதித்து இருந்தது. இதற்கிடையில், ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.

ஆனால், இந்த புகழ் வெளிச்சமும் அவரை மீண்டும் இந்த கேலிக்குள் தள்ளியது. இதெல்லாம் தன் வாழ்க்கைமீது ரம்யா கட்டுப்பாடு எடுக்கும் வரைதான்.

இன்று ரம்யா முன்னெப்போதையும் விடவும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதை எப்படி அவர் சாதித்தார் என்பதைதான் Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

உடற்பயிற்சியின்மீதும், டயட் உணவு முறைகளின் மீதும் காலங்காலமாக இருந்து வரும் தவறான நம்பிக்கைகளை உடைப்பதுடன், போலியான வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காமல் பாதுகாப்பான வழிமுறைகள் மூலம் வாசகர்களை வழிநடத்துகிறார்.

இதில் உள்ள வழிமுறைகளும் உடற்பயிற்சி முறைகளும் நிச்சயம் வாசகர்களை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு, “என் அன்பான தோழி ரம்யா புத்தகம் எழுதி இருக்கிறார். பென்குயின் இந்தியா இந்த புத்தகத்தை பப்ளிஷ் செய்துள்ளது.

இந்த ஃபிட்னெஸ் சூப்பர் ஸ்டார் ரம்யா உடற்பயிற்சியில் தன் மொத்த அனுபவத்தையும் இதில் தொகுத்துள்ளார்.

வாழ்க்கைப் பாடம், தவறுகள் மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் மூலம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர் நடத்தி வருகிறார். எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. வாழ்த்துகள்!” என்றார்.

எழுத்தாளர் ரம்யா, “இது என் முதல் புத்தகம். அதில் என் மொத்த ஆன்மாவையும் கொடுத்துள்ளேன்.

இது வெறும் ஃபிட்னெஸ் வழிகாட்டியோ என்னுடைய நினைவுக் குறிப்போ மட்டுமல்ல, இது இரண்டையும் விட இன்னும் பெரிதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட என் வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் உண்மையாக தெரிவித்து இருக்கிறேன்.

என்னுடைய இந்த புதிய பயணத்தில் உங்கள் அனைவரது அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

You might also like