மாநகராட்சி விளம்பரப் படத்தில் யோகி பாபு!

சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தூய்மைப் பணியாளர் வேடத்தில் நடித்துள்ளார்.

அதற்கான படப்பிடிப்பின்போது அவர் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.

யோகி பாபுவைப் பார்த்த மக்கள் ஆர்வத்துடன் குப்பைகளை தரம் பிரித்து வண்டியில் சேர்த்தனர். நாடறிந்த நகைச்சுவை நடிகர் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்ற அடிப்படையில், இந்த விழிப்புணர்வு விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like