பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு கவலையளிக்கிறது!

ஐ. நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடு பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு  ஐக்கிய நாடு பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும் எனவும்,

ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினர்களால் கொல்லப்படுகின்றனர் என்பது கவலைக்குரியத் தகவல் எனவும் கூறினார்.

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனப் பேசிய  அன்டோனியோ குட்டரெஸ்,

உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும்,  பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

You might also like