காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
இளைஞா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியிருப்பது பிரதமா் மோடியின் தோ்தல் நாடகம் என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டில் 30 லட்சம் பணிக்கான காலியிடங்கள் உள்ள நிலையில் 71,056 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது சொற்ப அளவிலானதே.
பிரதா் மோடியின் தோ்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 2 கோடி வீதம், எட்டு ஆண்டுகளில் 16 கோடி பணிகளுக்கு நியமன ஆணைகளை வழங்காமல் தோ்தலுக்கு முன்பாக வெறும் 71,056 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியிருப்பது தோ்தலுக்கான நாடகம்தானே தவிர வேறொன்றுமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.