விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

முதல் முதலாக தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் விக்ரம் – எஸ் என்ற ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக ரீதியாக ராக்கெட்டுகளை ஏவுவதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஆன இஸ்ரோ தற்போது தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளியில் தனியார் துறை ஏவுதல் தொடங்கும் வகையில் இஸ்ரோ உடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு பிரரம்ப் Prarambh – the beginning என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய் அவர்களை நினைவு கூறும் வகையில் ஸ்கைரூட்டின் ஏவுகணைகளுக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம்-எஸ் ராக்கெட்  2 இந்திய செயற்கைக்கோள் மற்றும் 1 வெளிநாட்டு செயற்கைக்கோள் என 3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றுள்ளது.

You might also like