பாலிவுட்டில் வயசை கடந்த காதல் ஜோடி!

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வெளியான ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை மலாய்க்கா அரோரா.

கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்தார். 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், இவர்களுக்கு அர்ஹான் (20) என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூரும் இவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் கசிந்து வருகிறார்கள். தற்போது 49 வயதாகும் மலாய்க்கா அரோராவும், அவரைவிட 12 வயது இளையவரான அர்ஜூன் கபூரும் காதலித்துவருவது பாலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.

வயசைக் கடந்த காதல் பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  தங்களது காதல் பற்றி குடும்பத்தாருக்குத் தெரியும் என காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அர்ஜூன் கபூர் தெரிவித்தார்.

இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.  சமீபத்தில் தன் சமூகவலைத்தள பக்கத்தில்  “நான் ஆம் என்று சொல்லிவிட்டேன்” என்று பதிவிட்டிருந்தார் மலாய்க்கா. இது அவரது ரசிகர்களுக்கு சர்க்கரைச் செய்தியாக உற்சாகம் அளித்துள்ளது.

You might also like