ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது.

டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஹிப் ஹாப் தமிழா – கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

You might also like