பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் போர் வீரர் பிரித்விராஜ் சௌகானின் சிலையினை திறந்து வைத்துப் பேசிய அவர், ”இந்தியா இனியும் வலிமையில்லாத நாடு எனக் கூற முடியாது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதால் எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்க முடியாது.
எங்களுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தால் தக்க பதில் தரப்படும். இதனை எங்களது ராணுவ வீரர்கள் பல நேரங்களில் நிரூபித்துள்ளனர்.
2016-ம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2109-ம் ஆண்டில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்கள் அதற்கான உதாரணங்கள். கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
கலானியாதிக்க மனநிலையில் இருந்து நாம் வெளியில் வர வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார்.