– பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் ஆகியவை உள்ளன.
இங்குள்ள அடர் வனப்பகுதிக்கு அருகில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை விட்டு, யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் தென்படுகின்றன.
குறிப்பாக அக்காமலை எஸ்டேட் பகுதியில் ஆறு குட்டிகளுடன் 20 காட்டு யானைகள் தேயிலைக் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளது.
எனவே, ”யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை அப்பகுதி ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் மிகவும் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும்” என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.