நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும்.
இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டடப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிகிறது.
முன்னதாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.