ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்தப் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு.
படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனைச் சுற்றி தயாரிப்பாளர்கள் வலைவிரித்துள்ளார்கள். ஆனால், அதே நிறுவனத்துக்கு அவர் மீண்டும் படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.
“பிரதீப் இயக்குவது உறுதியான தகவல்தான். அதில் ஜெயம் ரவி நடிப்பாரா? பிரதீப்பே நாயகனாக நடித்து இயக்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை” என்று ஏஜிஎஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.