புத்த மதம் தழுவிய நடிகர் சாய் தீனா!

கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் சிறை வார்டனாக நடித்தவர் நடிகர் தீனா. பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்தார்.

எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.

நடிப்பையும் தாண்டி தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார்.

வில்லன் என்பவன் படத்தில் மட்டும்தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூக அக்கறை தென்படும்.

தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் புத்த மதத்தைத் தழுவியுள்ளார். பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று புத்த மதத்திற்கு மாறியுள்ளார் தீனா.

You might also like