தீவிரமான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ‘யசோதா’ படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். அதிக எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் இப்படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் சென்சார் பெற்றுள்ளது.
வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்சன் மற்றும் எமோஷன் உள்ளடக்கிய கதை என்பது படத்தின் டிரைலர் காட்சிகளில் தெளிவாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது, சமந்தாவின் திறமையான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் கதைக்கு வலுவூட்டும் பின்னணி இசை பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை அதிகப்படுத்தி ஆர்வமூட்டும் கதையாக அமையும்.
திறமையான இயக்குநர்களான ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில், தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகிறது.
உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் கூட சினிமா மீது நடிகை சமந்தா காட்டும் அர்ப்பணிப்பு உலகம் முழுவது இருக்கக்கூடிய அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது.