காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் டெல்லி அரசு!

வாகன மாசுபாட்டைக் குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும் என டெல்லி அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் கோபால் ராய், “வாகன மாசுபாட்டைக் குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும்.

மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தரபிரதேசம், அரியானாவிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது. விவசாயிகளை துன்புறுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்வதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

You might also like