இன்றைய நச்:
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன.
வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக ஒரு வாக்கியமாக ஒரு கவிதையாக நம்மிடையே பறிமாறிக் கொள்கிற போது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன.
வாழ்வதற்குண்டான வழியை புத்தகங்கள் நமக்கு காண்பிக்கின்றன. புத்தகம் என்பது பொழுது போக்கு மட்டுமல்ல. நல்ல நண்பன், உயர்வான குரு.
-பாலகுமாரன்