இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் படமான “ஏஜெண்ட்” வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
ரிலீஸ் அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது.
படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக்கொண்ட விதம் நம்மை வியக்க வைக்கிறது.
புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்றுகொண்டிருப்பது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது.
டீசரில் காட்டப்பட்ட அகிலின் அதிரடி ஆக்சன் பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அட்டகாசமான டீசரை அடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.