அருமை நிழல்:
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு; கவிஞர் கண்ணதாசன், ரவீந்தரின் பளிச்சென்ற வசனங்கள்; “தூங்காதே தம்பி தூங்காதே” போன்ற பட்டுக்கோட்டையாரின் உற்சாக வரிகள்; எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசை; எல்லாவற்றிற்கும் மேலான எம்.ஜி.ஆரின் இயக்கம் எல்லாம் சேர்ந்து நாடோடி மன்னனின் அபாரமான வெற்றிக்குக் காரணமாகி விட்டன.
அந்த வெற்றிப் படத்தின் 100 ஆவது நாளன்று நாளிதழில் வெளிவந்த விளம்பரம் இது.
நன்றி: முகநூல் பதிவு