நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா?
நாம் தூங்கும் போது, நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.
நாம் தூங்கி எழும்பி சோம்பல் முறிக்கும் விதமாக கைகளை நீட்டும்போது, தசைகள் உயிர்ப்படைகின்றன.
இதனால் இதய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நுண்குழாய்கள் விரிவடைகின்றன. அதோடு தசை ஏற்பிகளின் தூண்டுதல்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
எனவேதான் நாம் காலையில் எழும்பியவுடன் கை, கால்களை நீட்டி சோம்பல் முறிக்கிறோம்.
தகவல்: ஆர். மகேஷ்வரி, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவி.