அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆவின் பாலகங்கள் அமைத்து மாணவர்களுக்கு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முன்வருமா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கி அனுமதி வழங்கும் பட்சத்தில், அங்கு ஆவின் பாலகம் அமைத்து மாணவர்களுக்கு மானிய விலையில் பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்றத்தில் கூறினார்.
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்வைத்த கோரிக்கையால் வெளிவந்த இந்தச் சிறப்பு அறிக்கையால், ஆவின் பால் பொருட்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.