– நடிகை பானுமதி
#
“1985 ல் இசைக்கல்லூரி முதல்வர் பதவி தேடி வந்தது. அதே ஆண்டு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இசைக்கல்லூரி முதல்வர் நியமனத்தைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் தனது வீட்டுக்கு என்னை அழைத்துப் பொன்னாடை போர்த்தினார்.
“அம்மா… உங்க ரசிகை எம்.பி. ஆகிவிட்டார்… தெரியுமா?” என்றார்.
“யாரைச் சொல்றீங்க? மிஸ்டர் எம்.ஜி.ஆர்?”
“அதாம்மா! அம்மு! ஜெயலலிதா”
“அடடே! ரொம்பச் சின்னப் பெண்ணாச்சே! எம்.பி. ஆக அரசியல் அனுபவம் நிறைய வேண்டுமே”
“இரண்டு வருஷம் அம்மு அரசியலில் நல்லா பழகிட்டாங்க… அண்ணாவின் கொள்கைகளை அழகாப் பேசுவாங்க” என்றார் எம்.ஜி.ஆர் சிரித்தபடி.
மறக்க முடியாத சம்பவம் இது.”
இந்து தமிழ் திசை – அக்டோபர் 18 தேதியிட்ட நாளிதழில், நடிகை பானுமதியின் ‘நிரைக்கு வந்த தாரகை’- என்கிற தலைப்பில் தஞ்சாவூர்க் கவிராயரின் தொடரில் இருந்து சிறு பகுதி.