– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பிரதமர் கூறியிருந்தார்.
அந்த வேலைவாய்ப்புகள் எங்கே? ஆனால், அதற்கு மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசு பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளது.
நீங்கள் சப் இன்ஸ்பெக்டராக ஆக வேண்டும் என்றால், நீங்கள் ரூ.80 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுத்தால், கர்நாடகாவில் வேலை கிடைக்கும்.
இல்லையென்றால், வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்க வேண்டியது தான். கர்நாடகாவில் உள்ள 40 சதவீத கமிஷன் அரசு, பணம் கொடுத்தால் தான் எந்த வேலையும் செய்வோம் எனக்கூறுகிறது” என்றார்.