இளைஞர்களின் கனவு நாயகனும், ஏவுகணை நாயகனுமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தாய் இணையதளத்தின் சிறு பதிவு.
இளைஞர்களின் எழுச்சி நாயகனான அப்துல் கலாம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கனவுப்படி தொடங்கப்பட்ட ராமாபுரம் சிறப்புப் பள்ளிக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு அப்துல் கலாம் வந்து பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
செவித்திறன் மற்றும் வாய் பேச முடியாத அந்தக் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை விதைத்த நம்பிக்கை நாயகன், எம்.ஜி.ஆரின் கடும் உழைப்பையும், மக்கள் மீதான நலனையும் எடுத்துக் கூறினார்.
“இந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கக் கூடிய பள்ளியை நான் பார்க்கவில்லை.
வள்ளலான எம்.ஜி.ஆர் மறைந்தும் வள்ளலாக இருக்கிறார்” என நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார் அப்துல் கலாம்.
எவ்வளவு அர்த்தச் செறிவுள்ள பாராட்டு!