ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார்.

இறுதிப் போட்டியில் அவருக்கு 6-வது இடம் கிடைத்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் தடை செய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானது.

விசாரணையில் ஊக்க மருந்து பயன்படுத்தியதை கமல்பிரீத் கவுர் ஒப்புக் கொண்டார். 

இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து, தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தடை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2024 ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கமல்பிரீத் கவுர் பங்கேற்க முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கமல் பிரீத் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like