இந்த மண்ணிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது!

– எம்.ஜி.ஆரின் நெகிழ்ச்சியான வசனம்

“எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது.

மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான்.

என் தாய் எனக்குப் பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்குச்  சோறூட்டி வளர்க்கறாங்கடா.. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒருபிடி மண்ணுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யற பரம்பரையில் வந்தவன்டா நான்.

நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரைக் கூட்டி வந்து படை எடுத்தாலும், இந்த மண்ணிலிருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா.

என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில் தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத் தான் அணைக்கும். என் உயிர் இந்த மண்ணிலே தாண்டா போகும்.

ஆனா, அந்த  நேரத்திலே நான் எழுப்புற உரிமைக்குரல், இங்க மட்டுமில்லே, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுலே அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டுத் தாண்டா இருக்கும்”

1974 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த வசனம்.

*

You might also like