தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 51 % உயர்வு!

– சபாநாயகர் அப்பாவு 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் ஊரகவளர்ச்சி மூலம் ஊரக சுகாதாரத்தில் சிறந்த மாநில பட்டியலில் 3-வது இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய அளவில் 24 சதவீதம் பேர் பட்டம் பெறுகின்றனர்.

தமிழகத்தில் பட்டம் படிப்போர் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் கல்லுாரிகளில் வகுப்பறைகள் கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கி காமராஜ் நினைவு கட்டடம் என்ற பெயரில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பிற்கு செல்வோருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தில் கல்லுாரிகளில் பட்டம் முடித்த மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் பயிற்சி மையத்தை அரசு செயல்படுத்துகிறது” எனக் கூறினார்.

You might also like