‘சூரரைப்போற்று’ படத்துக்காக தேசிய விருது பெற்ற சூர்யா!

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருதுப் பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதன்படி சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும், ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது.

இதேபோல், சூரரைப் போற்று படத்தைத் தயாரித்ததற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருது  2 டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்காக ஜோதிகா தேசிய விருது பெற்றார்.

இதனிடையே, நடிகர் சூர்யா தேசிய விருது பெறுவதை அவரது மனைவி ஜோதிகாவும், ஜோதிகா விருது பெறும்போது சூர்யா படம் எடுப்பதையும்  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

You might also like