ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
உலக இதயதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?’ என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாரடைப்புக்கு காற்று மாசுவும் பிரதான காரணம் என்கிறது அந்த ஆய்வு.
40 வயதுக்கும் குறைந்த 2.500 பேரிடம் கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிறுவனம் வேறு சில மையங்களுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது.
ஆய்வு தொடர்பாக இந்த நிறுவன இயக்குநர் சி.என்.மஞ்சுநாத் தெரிவித்த தகவல்கள் கவலை அளிப்பதாக உள்ளது.
“முன்பெல்லாம் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர்களை பிள்ளைகள் அழைத்து வருவார்கள். இப்போது நிலமை தலை கீழ்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றோர்கள் அழைத்து வருகிறார்கள்.
மாரடைப்புக்கு காற்று மாசு பிரதான காரணம்.
போக்குவரத்து நெரிசலான, காற்று மாசு உள்ள இடத்தில் ஒருவர் 5 நிமிடம் நிற்பது, 5 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு நிகரான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தினமும் 8 மணி நேரம் வாகனம் ஓட்டும் லாரி டிரைவர்களுக்கு சின்ன வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது’’ என்கிறார் மஞ்சுநாத்.
படிக்கும் போதே நெஞ்சு கனக்கிறதா?
– பி.எம்.எம்.