வசந்த மாளிகைக்குப் பொன்விழா!

*
நடிகர் திலகம் சிவாஜியின் படங்களில் காதலின் உன்னதத்தை வித்தியாசமாகச் சொன்ன படம் ‘வசந்த மாளிகை’.

பங்களாவாசியாகத் தான் நினைத்தபடி வாழும் கதாநாயகன் சாதாரணக் குடுமபப் பின்னணியில் இருந்து தன்னிடம் செகரெட்ரியாகப் பணியாற்ற வந்த வாணிஸ்ரீயைக் காதலிக்கிறார்.

காதல் அவரையும், அவருடைய வாழ்க்கையையும் மாற்றுகிறது. குடிப்பதைக் கொண்டாடியவர் அதிலிருந்து விடுபடுகிறார்.

காதலிக்காகப் பிரமாண்டமான வசந்த மாளிகையைக் கட்டுக் காதலியை அங்கு அழைத்துப் போய்க் காட்டும்போது சிவாஜியின் வசனம் அற்புதமாக இருக்கும்.

கே.வி.மகாதேவனின் இசையில் “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன் ஏன்?” பாடலும், மெல்லிய மெலடியான “மயக்கம் என்ன?” பாடலும், படமாக்கப்பட்ட விதமும் அருமை.

இதில் சிவாஜியின் தோற்றம் தனித்துவமான ஸ்டைலுடன் இருக்கும். மீண்டும் வெளியிடப்பட்ட பிரிண்ட்டில் வரும் “வசந்த மாளிகை”யைப் பார்ப்பவர்கள் அழகான கனவுக்குள் நுழைந்த மாதிரி உணர்வார்கள்.

You might also like