குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்
கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
திருவிழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது எனக் கூறிய அவர், மைசூரு தசரா விழா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம் இது எனக் கூறிய குடியரசுத் தலைவர், அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும் எனவும்
2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும் எனவும் இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.