ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். நேற்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு, அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.