பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஆன்லைனில் ஏலம்!  

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பிரதமருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர்.

இவை அனைத்தும் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு அதில் வரும் தொகை கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படுகிறது.

கலைக்கூடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 1200 பரிசு பொருட்கள் ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகின்றது. இந்த ஏலம் நேற்று தொடங்கியது.

இது குறித்துப் பேசிய ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘விநாயகர் சிலை, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மாதிரி, வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி உள்ளிட்டவை ஏலம் விடப்படுகின்றன.

சிற்பி அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையும் ஆன்லைன் ஏலத்தில் இடம்பெறுகின்றது’’ என்றார்.  இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதி வரை இந்த ஆன்லைன் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like