தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், 10-ம் வகுப்பில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2019-ல் இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது.
ஆனாலும், தமிழகத்தில் வசிக்கும் மொழி சிறுபான்மையினருக்கு, தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க 2022 வரை விலக்கு அளித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், மொழி சிறுபான்மையினர் அமைப்பு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கவுல், அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.