தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அது சார்ந்த தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் கூடும் நோயாளிகளின் எண்ணிக்கை இதைத்தான் உறுதிப்படுகிறது.
ஏற்கனவே சென்ற ஆண்டு இதே மாதிரியான, மழைக்காலத்தில் விதவிதமான வைரஸ் காய்ச்சலும் டெங்கு போன்ற தொற்று நோய் பாதிப்பும் நிலவியது பலருக்கு தெரிந்திருக்கலாம்.
இப்போதும் மழைக்காலம் துவங்கிய பிறகும், டெங்கு காய்ச்சலின் தாக்கமும் விநோதமான ஒரு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டுருக்கிறது.
தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்ரமணியம் இந்த விநோத காய்ச்சலை H.N 1 வகை காய்ச்சல் என்று குறிப்பிடுகிறார்.
இந்த விநோத காய்ச்சலுக்கு இது வரை 280 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது தவிர வயதில் மூத்தவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவதும் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மழைக்காலம் மேலும் தொடர இருப்பதால் பலரும் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது.